Homeஇன்றைய செய்திகள்இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது - 2nd ODI IND VS...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது – 2nd ODI IND VS AUS

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது 2023 – மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. அதன் பிறகு இன்று 20-03-2023 ஆம் தேதியில் இரண்டாவது ஒருநாள் போட்டி YS Raja Reddy Cricket Stadium என்ற மைதானத்தில் இன்று பிற்பகலில் ஆட்டம் தொடங்கியது. இங்கு தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே இந்திய அணி சொதப்ப தொடங்கிவிட்டது.

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சலர் மிச்சேல் ஸ்டார்ச் பந்துகளில் இந்திய அணி வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல், உடனக்குடன் அவுட்டாகி வெளியே சென்றார்கள். அதனால் இந்திய அணி இப்பொழுது வரை 59 ரன்களுக்கு  ஐந்து விக்கெட் களை இழந்து தடுமாறி வருகிறது. இருந்தாலும் பொருத்திருந்து இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுவருமா என்று பாப்போம்

முந்தைய ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகன் ஆன கே எல் ராகுலும் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் விராட் கோலி களத்தில் இருந்து போராடி வருகிறார். என்றாலும் சில பட்ஸ்மான்கள் மட்டுமே இன்னும் உள்ளார்கள். அதனால் இந்திய அணி ஒரு நம்பிக்கை அளிக்க கூடிய ரன்கள் எடுத்தால் நல்லதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இப்பொழுது நடந்து வரும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையான இரண்டாவது ஒருநாள் போட்டி இரவு 8 மணி அளவில் முடிவுக்கு வரும். அதன் காரணமாக பொறுமையுடன் காத்திருந்து, இந்திய அணியின் பேட்டிங் மற்றும் அவர்களின் பௌலிங் தரத்தை பொறுமையாக இருந்த பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES