சிங்கப்பூர் நாட்டில் தமிழர்கள் மற்றும் இந்தியர்களுக்கு பல்வேறு துறைகள் சார்ந்த பதவிகள் அமைந்துள்ளது. ஆனால் அந்த பதவிகளுக்கு பெரும்பாலான இந்தியர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ விண்ணப்பிக்கும் முறைகள் தெரிவதில்லை. அதனால் இந்த பக்கத்தில் இதற்கான சில தகவல்கள் உங்களுக்காக தெரிவிக்கிறோம்.
சிங்கப்பூர் நாட்டில் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நம்பிக்கையான, உண்மையான கன்சல்டன்சிகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது ஏற்கனவே சிங்கப்பூரில் வாழும் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.
மிக முக்கியமாக எந்த ஒரு தனிநபரை நம்பியோ அல்லது எந்த ஒரு போலியான கன்சல்டன்சிகளை நம்பியோ, நீங்கள் அவர்கள் தெரிவிக்கும் அனைத்து விவரங்களும் உண்மை என்று நம்பி விடக்கூடாது. அவர்கள் தெரிவித்த தெரிவித்த அனைத்து தகவலையும், ஒருமுறைக்கு, இருமுறை தெளிவான முறையில் தெரிந்து கொண்டு அப்ளை செய்ய வேண்டும்.
இணையம் மூலமாக யாரையும் நம்பி, நீங்கள் சிங்கப்பூர் செல்ல தேவை கிடையாது. நீங்கள் நேரடியாக கன்சல்டன்சிகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது சிங்கப்பூரில் ஏற்கனவே உங்களுக்கு ஏதாவது நம்பக தன்மை வாய்ந்த நபர்கள் தெரிந்தால், அவர்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு சார்ந்த தகவல் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி தெரிந்து கொண்ட பிறகு, அந்த வேலை வாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலையும் நீங்கள் தெளிவான முறையில் தெரிந்து கொண்டு, இந்தியாவில் நீங்கள் செய்யவிருக்கும் விதிமுறைகளை சரியான முறையில் செய்து முடித்து, அந்த நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அனைத்து தகவலையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கட்டாயம் உங்களுக்கு சிங்கப்பூரில் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.