Homeவேலைவாய்ப்பு தகவல்தமிழ்நாட்டில் ஒரு லட்சம் சம்பளத்தில் அரசு வேலை உண்டா?

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் சம்பளத்தில் அரசு வேலை உண்டா?

தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு விதமான அரசு வேலை வாய்ப்புகள் வெளியாகிறது. ஆனால் அந்த அனைத்து அரசு வேலைகளுக்கும் மாதம் ஒரு லட்சத்தில் சம்பளம் கிடைப்பது இல்லை. ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் சம்பளத்தில் அரசு பதவிகள் கிடைக்கிறது.

பொதுவாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு போன்ற படிப்புகளில் உள்ள தமிழ்நாடு அரசு வேலைகளில் இதுபோன்ற மாதம் ஒரு லட்ச சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் சற்று குறைவு. அதே பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு  கல்வி தகுதிகள் உள்ள தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு இது போன்ற ஒரு லட்சம் சம்பளத்திலான, அரசு பதவிகள் சற்று அதிகமாகவே உள்ளது.

அதேசமயம் மாதம் ஒரு லட்ச சம்பளத்தில் அரசு வேலை பெறுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் அதிக சம்பளம் என்ற ஒரு காரணத்தினால் இதற்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். பல்வேறு துறைகளில் பல்வேறு சம்பளத்தில் அரசு அறிவிப்புகள் இருந்தாலும் இதற்கு போட்டிகள் அதிகம்.

அதனால் உங்கள் துறை சார்ந்த பதவிகளை நீங்கள் தேர்வு செய்து எப்படிப்பட்ட பதவிகளை எப்படி பெற வேண்டும், அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அந்த பதவிகளுக்கு மட்டுமே நீங்கள் பொறுமையாக காத்திருந்து, தேர்வு எழுதி அதற்கு பிறகு பெற்றுக் கொள்ளவும்.

தமிழ்நாட்டில் உள்ள வருமானத்துறை, போக்குவரத்து துறை, ரயில்வே துறை, இந்து அறநிலைத்துறை மற்றும் வங்கி துறை மற்றும் பல்வேறு விதமான துறைகளில் இப்படிப்பட்டஒரு லட்சம் சம்பளத்தின் நல்ல பெரிய பதவிகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது. அந்த பதவிகளை பொறுத்து அந்தந்த பதவிகளுக்கான மாத சம்பளம் மாறுபடும்.

RELATED ARTICLES