HomeVelaivaippu Seithigalதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

திருச்சியில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள நபர்களுக்கு தெரிந்த பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் மூலமாகா புதிதாக வேலை வாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதற்கான வேலைவாய்ப்பு அறிக்கை சார்ந்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு தகவல் 2023

  • தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மூலமாக Project Fellow என்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்ட Project Fellow பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Sc or M.Phil போன்ற படிப்புகள் படித்துள்ள தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் இப்பதவிக்கு கட்டாயம் 28 வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வாய்ப்பு கிடையாது. அதன் காரணமாக குறிப்பிட்ட வயது வரம்பிற்குட்பட்ட தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக வெளியான ப்ராஜெக்ட் ஃபெல்லோ பதவிகளுக்கு மாத ஊதியமாக 14,000 தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் உங்களை சார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக இந்த பதிவுகளுக்கு தேர்வு செய்வார்கள்.

BU Post விண்ணப்பிக்கும் முறை:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக Project Fellow பதவிகளுக்கு தகுதியுடைய நபர்கள் அனைவரும் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BU Post முக்கிய தேதிகள்:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக Project Fellow பதவிகளுக்கான முக்கிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 03.04.2023-ம் தேதி முதல் 21.04.2023-ம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Notification & Application Form PDF
RELATED ARTICLES