HomeVelaivaippu Seithigalஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் அமைப்பானது புதிதாக சில பதவிகளுக்கான வேலைகளை, இந்தியாவில் உள்ள தகுதியான நபர்களுக்கு அறிவித்துள்ளது. அதன் காரணமாக இங்கே Air India Engineering Services Ltd அமைப்பின் சார்பாக சில வேலை வாய்ப்பு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 தகவல்

  • ஏர் இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் அமைப்பின் சார்பாக கல்கத்தா, மும்பை, புதுடெல்லி போன்ற இடங்களில் Training Instructor என்ற பதவிகளுக்கான 23 காலியிடங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
  • ஏர் இந்தியா மூலம் வெளியிடப்பட்டுள்ள Training Instructor பதவிகளுக்கு கட்டாயம் BE அல்லது B.Tech போன்ற தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Air India Engineering Services Ltd அமைப்பின் Training Instructor பதவிக்கு உங்களுக்கு மாத ஊதியமாக 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாத ஊதியம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உங்களை நேர்முக தேர்வு மூலமாக இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள்.
  • அதிகபட்சமாக 35 வயது வரை இந்த ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு Training Instructor பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் எஸ்சி மற்றும் எஸ்டி உறுப்பினர்களுக்கு மட்டும் தேர்வு கட்டணம் கிடையாது. மற்ற வகுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்ட வேண்டும்.

AIESL Post விண்ணப்பிக்கும் முறை:

ஏர் இந்தியா அமைப்பின் மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் வெளியாகினாலும், புதிதாக Training Instructor பதவிகளுக்கான காலிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AIESL Post முக்கிய தேதிகள்:

நீங்கள் Air India Engineering Services Ltd பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலையும் ஒருமுறை, இருமுறை தெரிந்து கொண்ட பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேதியில் அதாவது 05.04.2023 ஆம் தேதி முதல் 26.04.2023-ம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, நேரடியாக தபால் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளவும்.

Official Website : aiesl.airindia.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES